இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுராதபுர, ஓயாமடுவே பிரதேசத்தில் நடைபெறும் “தேசத்திற்கு மகுடம் 2012″ வருத்தக, கல்வி கண்காட்சியில் கட்டற்ற மென்பொருள் மற்றும் ஹந்தான லினக்ஸ் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கும் பயிலரங்க நிகழ்வொன்றினை ஹந்தான லினக்ஸ் குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில்.
ICTA அமைப்பின் அனுசரணையுடன் “தேசத்திற்கு மகுடம்” பிரதேசத்தில் நடாத்தவுள்ளனர். இந்நிகழ்வு ஒரு தடவையில் நூறுபேர் கலந்து கொள்ளக்கூடிய கற்றல் கூடமொன்றில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு தங்களுக்குள்ள கட்டற்ற மென்பொருள் பயன்பாடு குறித்தான ஐயங்களைளைத் தீர்த்துக்கொள்ளலாம்.
இப்பயிலரங்கில் ஐந்து விடயங்கள் பற்றி விளக்கப்படும்
1..கட்டற்ற மென்பொருள் பற்றி
2. கல்வி தொடர்பான கட்டற்ற மென்பொருள்
3. ஹந்தான லினக்ஸ் திட்டம்
4. கட்டற்ற மென்பொருள் திட்டங்களில் பங்களிப்பது
5. ICTA வினால் முன்னெடுக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்கள்
கட்டற்ற மென்பொருள் தொடர்பான மேலதிக விபரங்களை பெற “தேசத்திற்கு மகுடம்” நிகழ்வு நடைபெறும் இடத்திலுள்ள ICTA வின் குடிலிற்கு பெப்ரவரி மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் வருகைத்தர மறவாதீர். மேலும் வடக்கிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட இந்நிகழ்வினை காண விளையும் நண்பர்களிடமும் இது பற்றிய தகவல்களை தயவு செய்து தெரிவித்து வைக்கவும்.
இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவினூடாக கட்டற்ற மென்பொருள் தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசத்திற்கு மகுடத்தின் நிமித்தம் ஹந்தான லினக்ஸ் 15.5 பதிப்பினை வெளியிடவுள்ளதுடன், அந்நிகழ்வில் ICTA அமைப்பினர் இப்பதிப்பின் பிரதிகளைபெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த புதிய பதிப்பினை பெற அனைவரும் எமது குடிலிற்கு அணி திரண்டு வருகை தாருங்கள். மேலும் உங்களிற்கு உதவும் முகமாக ஹந்தான குழுமத்தின் சார்பில் பந்துல, கல்ஹார, ஹிரன்ய, மற்றும் அனுஷ்க ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

නල්ල ඉරික මචෝ...
ReplyDelete